மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சங்கீதாவை, தஞ்சை சரக டிஐஜி கயல்விழி இன்று பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை மயிலாடுதுறை டிஎஸ்பி ராஜ்குமார் (பொ ) அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சங்கீதாவிடம் அளித்தார்.
மயிலாடுதுறையில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த பள்ளி நிர்வாகத்திடம் இவர் பணம் கேட்டதாகவும், பணம் தர மறுத்தால் மேலும் பலர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியதாகவும் இவர் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.