திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினார்.
கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் மாநிலத்தில் உள்ள பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந் நிலையில் லால்குடியில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் ரயில் விபத்தில் உயர்ந்த ஆத்மாக்களுக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வாழையூர் குணா, வடக்கு மாவட்ட செயலாளர் தினகரன், லால்குடி நகர செயலாளர் சிவகுமார், மாநில இளைஞரணி குழு உறுப்பினர் விஜய பிரபு ,மகளிர் அணி தனலட்சுமி, பிரியா வினோத்குமார், தர்மா உள்ளிட்டோர் மௌன அஞ்சலி செலுத்தினர்.