தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது. தொடர்ந்து 5-வது ஆண்டாக முதல் இடத்தில் நீடித்து வருகிறது. இதனை அடுத்து பெங்களூரு ஐ.ஐ.எஸ். 2-வது இடமும், டில்லி ஐ.ஐ.டி. 3-வது இடமும் பிடித்து உள்ளன.
பட்டியலில், மும்பை ஐ.ஐ.டி. 4-வது இடமும், கான்பூர் ஐ.ஐ.டி. 5-வது இடமும் பிடித்து உள்ளன.டில்லி எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் மையம் 6-வது இடமும், காராக்பூர் ஐ.ஐ.டி. 7-வது இடமும், ரூர்கி ஐ.ஐ.டி. 8-வது இடமும், கவுகாத்தி ஐ.ஐ.டி. 9-வது இடமும் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் 10-வது இடமும் பிடித்து உள்ளன.
இந்த சிறந்த என்ஜினீயரிங் கல்லூரி பட்டியலில் திருச்சி என்.ஐ.டி. 9-வது இடம் பிடித்து உள்ளது. இதுதவிர, பல்கலைக்கழக அளவில் பெங்களூரு ஐ.ஐ.எஸ். முதல் இடம் பிடித்து உள்ளது. இந்த பட்டியலில், கோவை அமிர்த விஷ்வ வித்யாபீடம் 7-வது இடமும், வேலூர் வி.ஐ.டி. 8-வது இடமும் பிடித்து உள்ளது. ஐ.ஐ.எம். வரிசையில் ஆமதாபாத் ஐ.ஐ.எம். முதல் இடமும், பெங்களூரு ஐ.ஐ.எம். மற்றும் கோழிக்கோடு ஐ.ஐ.எம். முறையே 2-வது மற்றும் 3-வது இடம் பிடித்து உள்ளன.
இதேபோன்று, நாட்டிலேயே சிறந்த கல்லூரிக்கான பெருமையை டில்லி பல்கலைக் கழகத்தின் மிரண்டா ஹவுஸ் கல்லூரி பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை பிரசிடென்சி கல்லூரி 3-வது இடம் பிடித்து உள்ளது. கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 4-வது இடமும், சென்னை லயோலா கல்லூரிக்கு 7-வது இடமும் கிடைத்து உள்ளது.