நாகப்பட்டினம்,காடம்பாடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகில் பிரபல தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பம் அடிப்படையில் வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் காப்பாளராக சீர்காழி சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் சேர்த்து 12 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் ஒரு வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காப்பகத்தில் இருந்து 12 வயது சிறுவன் சுவர் ஏரி குதித்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அதனைப் பார்த்த காப்பக நிர்வாகிகள் சிறுவனை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது தனது பாதுகாவலராக உள்ள 40 வயது பெண்மணி தன்னிடம் கடந்த மூன்று நாட்களாக பாலியல் சீண்டலில் ஈடுபடுபடுவதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் காப்பக நிர்வாகியிடம்
தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் நல பிரிவில் காப்பக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் நல அலுவலர் சிறுவனிடம் நடந்துவை குறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது பாலியல் சீண்டல் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து காப்பக நிர்வாகிகள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண் காப்பாளரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாள் காவலில் திருவாரூர் சிறையில் அடைத்தனர். பாதுகாவலரே சிறுவனிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.