தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் பள்ளிகளை திறப்பது மேலும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 12ம் தேதி அன்று(திங்கள்) 6 முதல் 12ம் வகுப்புவரை பள்ளிகள் திறக்கப்படும்.
1முதல் 5ம் வகுப்பு வரை 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இன்று காலை முதல்வர் ஸ்டாலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி 12ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.