அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்கள் 2 பேரும் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் மற்றும் வயல்களை பரமேஸ்வரியின் தந்தை சுப்பிரமணி பராமரித்து வருகிறார். இந்நிலையில் நாகல் குழி சாலையில் ஆனந்தராஜிக்கு சொந்தமான வீடும் தோட்டமும் உள்ளது . சுற்றி கம்பி வேலி காம்பவுண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிற்கு முன்பு சிமெண்ட் சீட்டினால் அமைக்கப்பட்ட இரண்டு கொட்டகையும் உள்ளது. இந்நிலையில்
அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரி சுதன், சிங்காரம், சுப்பிரமணியன் உள்ளிட்ட அடையாளம் தெரியாத சிலர் முன்விரோதம் காரணமாக ஆனந்தராஜின் இடத்தில் அத்தி மீறி நுழைந்து வீட்டைச் சுற்றி இருந்த கம்பி வேலி அருகில் இருந்த காம்பௌண்ட் சுவர் சிமெண்ட் சீட்டுகளால் அமைக்கப்பட்ட கொட்டகை அனைத்தையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் . இதன் இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து பரமேஸ்வரியின் தந்தை சுப்பிரமணியன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் சொத்துக்களை சேதப்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.