கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் இறந்து போய் உள்ளார்.இவருக்கு மணிமுத்து என்ற மனைவியும் ஒரு மகளும் இருந்துள்ளனர். திடீரென கணவன் இறந்த நிலையில் மணிமுத்து அவர் நிர்வகித்து வந்த கட்டுமான தொழில் நிறுவனத்தை முன் நின்று நடத்தி வருகிறார். இந்நிலையில் பட்டணம் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி கட்டிடம் இல்லாமல் இருந்து வந்துள்ளனர் அந்தப் பள்ளி குழந்தைகளுக்கு தனது கணவன் நினைவாக மணிமண்டபம் கட்டாமல் பள்ளிக்கூடம் கட்டடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டிக் கொடுக்கலாம் என நினைத்த மணிமுத்து தனது சொந்த செலவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனது கணவன் நினைவை போற்றும் விதமாக தரமான பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளார் அரசு பள்ளி
மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு எடுப்பதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளி கட்டிடமாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது இதுகுறித்து பேசிய கணவன் நினைவாக இந்த பள்ளிக்கூடத்தை மாணவர்களுக்கு பயன்படுத்தியதாக கட்டிக் கொண்டிருக்கிறோம் அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளிக்கூடமாக இது இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வசதி செய்து கொடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது பணம் உள்ள பொதுமக்கள் அரசு பள்ளிகளுக்கு இது போன்ற உதவிகளை செய்ய வர வேண்டும் எனவும் இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்தப் பள்ளி கட்டிடம் வருகின்ற திங்கட்கிழமை அன்று திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது