கோவை, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய சார்பில் முன்னால் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா முன்னிட்டு 900 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி நடைபெற்றது, இதில் கோவை, ஈரோடு, சேலம் மற்றும் கேராளவை சேர்ந்தவர்கள் போட்டியில் பங்குபெற்றனர், 200 மீ, 300 மீ என போட்டி நடைபெற்றது எனவும் குறிப்பாக இன்றைய இளைஞர்களின் மத்தியில் நாட்டு மாடுகளை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போட்டி நடைபெற்றது என தெரிவித்தனர், இப்போட்டியில் கலந்துகொண்ட காளைகள் சீறி பாய்த்தது பார்பவர்களை மிரள செய்தது, இப்போட்டியை காண சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டி கண்டு மகிழ்ச்சி அடைத்தனர், வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.