Skip to content

முதலிரவு அறையில் மணமக்கள் பரிதாப சாவு.. காரணம் என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது 22 வயது மகன் பிரதாப் யாதவ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி என்ற 20 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த மே 30ஆம் தேதி இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அடுத்தநாளான மே 31ஆம் தேதி ஊர்வலமாக புதுமண தம்பதி வீட்டிற்கு வந்த நிலையில், அன்றிரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. தம்பதி இருவரையும் மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்த உறவினருக்கு, அடுத்த நாள் காலை பேரதிர்ச்சி காத்திருந்தது. விடிந்து நீண்ட நேரம் ஆகியும் ஜோடி இருவரும் வெளியே வரவில்லை. உறவினர்கள் கதவை தட்டிப் பார்த்து திறக்கவில்லை என்றது கதவை உடைத்து அறைக்குள் சென்றனர். உள்ளே பிரதாப் மற்றும் அவரது மனைவி புஷ்பா இருவரும் பேச்சு மூச்சின்றி சடலமாக இருந்தனர். உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்படவே இருவரையும் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களும் பரிசோதித்து இருவரும் உயிரிழந்ததை உறுதி செய்தனர். ஜோடி இருவரின் உடலிலும் எந்த காயமும் இல்லாத நிலையில், பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தம்பதி இருவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தம்பதிக்கு முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறை. இதுவே மூச்சு திணறல் மற்றும் மாரடைப்புக்கு காரணமாக இருந்திருக்காலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜோடி இருவருக்கும் ஒன்றாக இறுதி சடங்கு செய்யப்படு அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *