Skip to content

ரயில் விபத்து.. 8 தமிழர்கள் நிலை தெரியவில்லை…

சென்னை, கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் தமிழகர்கள் 30 பேர் முன்பதிவு செய்த நிலையில், 8 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாகராணி, கார்த்திக், ரகுநாத், மீனா, ஜெகதீசன், கமல், கல்பனா, அருண் ஆகியோரை தொடர்பு கொள்ள இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 8 பேரின் குறித்த நிலை என்ன என தகவல் தெரிந்தால் உறவினர்கள், நண்பர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கட்டுப்பாட்டு அறை 1070 மற்றும் 044-28593990, 9445869843 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *