Skip to content
Home » தருமபுரம் ஆதீனம் குருமா சன்னிதானத்திடம் ஆசி பெற்ற சௌந்தர்யா ரஜினி…

தருமபுரம் ஆதீனம் குருமா சன்னிதானத்திடம் ஆசி பெற்ற சௌந்தர்யா ரஜினி…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருபூஜைவிழா, பட்டணபிரவேசவிழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு இப்பெருவிழாவின் கொடியேற்றம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி மடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருவிழாவின் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து

விழாவின் முக்கிய நிகழ்வான 6-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 8-ஆம் தேதி திருத்தேர் உத்ஸவமும்,


10-ஆம் தேதி தருமபுரம் ஆதீன கர்த்தர் சிவிகை பல்லக்கில் பட்டண பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வும் நடைபெற்ற உள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கணவர் விசாகன் தம்பதியினர் இன்று வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற தம்பதியினர் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *