கோவை நவக்கரை தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கே. ஜி சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கஞ்சா போதையில் இருந்தார். அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று கஞ்சா எப்படி கிடைக்கிறது என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நவக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படிக்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அர்ஜூன் (22) என்பவரிடம் திருச்சூர் பஸ் நிலையம் சென்று வினித் என்பவரின் கஞ்சாவை வாங்கி வந்து உடன் படிக்கும் நண்பர்கள் உதவியுடன் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அறையில் இருந்து போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த மாணவர்கள் திருச்சூரை சேர்ந்த எம். அர்ஜூன் (21), எர்ணாகுள்தை சேர்ந்த வி. அர்ஜூன் (22), திருச்சூரை சேர்ந்த அக்சய் (22) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.