கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வண்டி எண்12643 என்ற ரயில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு செல்வதற்காக புறப்பட்டது. திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு 12.30 மணிக்கு வந்த ரயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது அப்போது பிச்சாண்டார் கோவில் ரயில் நிலையம் தாண்டி வாளாடி ரயில் நிலையம் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் நடுப்பகுதியில் இரண்டு பெரிய லாரி டயர்கள் இருந்துள்ளன. அதிவேகத்தில் வந்த
கன்னியாகுமரி ரயில் டயரின் மீது ஏறியதில் ரயிலின் சக்கரத்தில் சிக்கி அந்தப் பகுதியிலேயே ரயில் நின்றது. இதனால் ரயிலின் குழாய் ஓரிடத்தில் பழுதடைந்தது. நள்ளிரவு 1.05 மணிக்கு நிறுத்திய ரயில் 1.45 மணிக்கு சரி செய்து 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. தொடர்ந்து ரயில்வே போலீஸ் சர்வீஸ் மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.