ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விபத்து நடைபெற்ற பாலசோரில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கினார். பின்னர் விபத்து நடந்த
பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார். விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அப்போது பிரதமருடன் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோரும் உடனிருந்து, விபத்து நடந்த இடத்தில் நிலைமையை ஆய்வு செய்தார். ரெயில் விபத்து நடந்த இடத்தில் நிலைமையை ஆய்வு செய்த பிரதமர் மோடி, அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றார்.