முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவரின் சமாதியில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. மலர் தூவி
மரியாதை செலுத்தினர். கனிமொழி எம்.பியின் தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் திமுக மகளிர் அணி சார்ந்த மாநில நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.