ஒடிசாவில் நேற்று இரவு 2 மணியளவில் 3 ரயில்கள் மோதி விபத்தானது. இந்தவிபத்தில் 288 பேர் பலியாகினர். மேலும் 700 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் இந்திய ராணுவம் மீட்பு பணியில் இறங்கியுள்ளது. மேலும் மீட்பு பணி தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளார். இச்சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்சம்பவத்திற்கு அரசியல் வாதிகளும், சமூக ஆர்வலர்களும் மிகுந்த வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் இச்சம்பம் தொடர்பாக வைரமுத்து கவிதை வடிவில் வருத்தம் தெரிவித்துள்ளார்…
இரும்புப் பெட்டிகளைப் போலவே
இடிபாடுகளுக்குள் சிக்கி
இதயக்கூடும் நொறுங்கிவிட்டது
பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கல்
மீட்புப் பணியாளர்க்குத்
தலைதாழ்ந்த வணக்கம்
இருந்த இடத்தில்
எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்
கண்ணீர்
கன்னம் தாண்டுகிறது
வைரமுத்து கவிதை வடிவில் இரங்கல் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.