பெரம்பலூர் மாவட்டத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அவர்களின் 100- வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கொல்கத்தா, ஒரிசா ரயில் விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், த.ஜெகதீஷ்வரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத்,
வேப்பூர் வடக்கு ஒன்றிய கழகச்செயலாளர் தி.மதியழன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம்,
நகராட்சி உறுப்பினர்கள் சேகர், துரை.காமரஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் அ.அப்துல்கரீம், வரகூர்.ராஜேந்திரன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளனர்.