தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து கடை, செல்போன் கடை, ரெடிமேடு துணிக்கடை உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் அந்த மாநகராட்சி வணிக வளாகத்தில் வியாபாரிகள் சங்க பெருளாளராகவும் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாண்டியன் கடையை அடைத்து விட்டு கீழ்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தை எடுக்க வந்த போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரை இரும்புகம்பியால் தாக்கி உள்ளனர். இதில் பாண்டியன் மண்டை உடைத்தது.
இந்த நிலையில் பாண்டியன் சத்தம் கேட்டு அங்கு வந்த மற்ற வியாபாரிகள், பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்டது தொடர்பான தகராறில் அவரை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து பாண்டியன் தஞ்சை நகர கிழக்கு போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாண்டியனின் உறவினர்கள், தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், பாண்டியன் மீது தாக்குதல் நடத்திய, அதே வணிக வளாகத்தில கடை நடத்தி வருபவர் உள்பட 5 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.