Skip to content
Home » திருச்சியில் முக்கிய கடைவீதிகளில் 56 கிலோ குட்கா பறிமுதல்…..

திருச்சியில் முக்கிய கடைவீதிகளில் 56 கிலோ குட்கா பறிமுதல்…..

திருச்சி பெரியகடை வீதி, ராணி தெருவில் உள்ள சீனிவாசன என்பவர், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்து வந்ததாக இரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வராஜ், பாண்டி, ஸ்டாலின், அன்புச்செல்வன் பொன்ராஜ், இப்ராகிம் மற்றும் மகாதேவன் கொண்ட குழுவால் அவரது வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 56 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 6லட்சத்து 57 ஆயிரத்து 320 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்  கடைகாரர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக 227 கிராம் வெள்ளி நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேல்நடவடிக்கைக்காக ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதாலெட்சுமி மற்றும் கோட்டை ஆய்வாளர் தயாளன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களில் வழக்கு போடுவதற்காக 6 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *