பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிகே சிவக்குமார் கூறியதாவது:- கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில்டில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன் மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. என்றார்.
கர்நாடகா துணை முதல் மந்திரி பேச்சுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார், மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் . மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அமைச்சர் சிவக்குமாரின் பேட்டிக்கு, தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனும் கண்டனம் தெரிவித்தார்.