திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் ,சரடமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் 75 வயதான தைலம்மாள். இவர் தனது மகன் முருகவேலுடன் கடந்த 27 ந்தேதி மோட்டார் பைக்கில் சரடமங்கலம் அணைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே பாம்பு வந்ததாக கூறப்படுகிறது. மோட்டார் பைக்கின் வெளிச்சத்தில் பாம்பை கவனித்த முருகவேல் திடிரென பிரேக் போட்டுள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த தைலம்மாள் எதிர்பாராதமாக மோட்டார் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்த்தில் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிசிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.