திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான டிப்பர் டிராக்டர் வண்டியை
ஓட்டுனர் கண்ணன் எடுத்துக்கொண்டு உப்பிலிய புறத்திலிருந்து வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள வயலுக்கு விவசாய வேலை சம்பந்தமாக சென்றுள்ளார் அப்பொழுது துறையூர் ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் வண்டியின் பின்புறம் உள்ள டிப்பர் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இதில் சிறு காயங்களுடன் கண்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் நடு ரோட்டில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்ததால் துறையூர் ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது