கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை பகுதியில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவர் தனது அன்றாட பணிகளை தோட்டத்தில் செய்து கொண்டிருந்தபோது ஏதோ சத்தம் புதருக்குள் கேட்டு உள்ளது. இதனை அடுத்து சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி காளிமுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து பாம்பு பிடிக்கும் வல்லுனர் குழுவை கொண்ட வைல்ட் ஹபிடேட் கன்சர்வேஷன் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் பாம்பு பிடிக்கும் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு புதருக்குள் மறைந்திருந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. பின்பு மீட்கப்பட்ட பாம்பு பத்திரமாக டாப்ஸ்லிப்பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.