தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் , ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும். ரஜினி இனி அரசியலுக்கு வர மாட்டார். வயதாகிவிட்டது. அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை” என்று கூறினார்.