சென்னையில் 5 பணிமனைகள் மற்றும் திருச்சி, கும்பகோணம் உள்பட தமிழகம் முழுவதும் 12 பணிமனைகளில் 400 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று மாலை 5.30 மணி முதல் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். தொமுச உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பின்றி பஸ்கள் திடீரென இயக்கப்படாததால், பயணிகள் அவதிக்குள்ளானார்கள். சென்னையில் பணிமனைகள் முன் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் திடீரென பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம், தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.