மைசூர் மாவட்டம், டி.நரசீப்பூர் மாவட்டம் குருபுரு அருகே தனியார் பஸ்சும் -இன்னோவா காரும் இடையே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தி.நரசிப்பூர் ஊரக காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை
கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.