சீனாவில் தற்போது அதிக அளவில் பாதிப்புகளை உருவாக்கியிருக்கும் பிஎப் 7 வகை கொரோனா தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 2 பேருக்கும் ஒடிசா மாநிலத்தில் ஒருவருக்கும் புதியவகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிஎப் 7 ஓமிக்ரான் வைரஸ் ஆனது பிஏ 5 ஓமிக்ரான் வைரஸின் துணை வகை என கூறப்படுகிறது. இது அதிக அளவில் பரவக்கூடிய தன்மை கொண்டுள்ளது. மேலும் ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கும் இந்த புதியவகை கொரோனா பரவ கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே இந்த வகை கொரோன பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது இந்தியாவில் இந்த வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது..