டில்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது மதிக்கத்தக்க சாக்ஷி என்ற சிறுமி, சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது 20 வயது மதிக்க தக்க காதலன் சாஹல் , சிறுமியை சரமாரியாக கத்தியால் சரமாரியாக குத்தினான். 40 முதல் – 50 முறை குத்தினான்
இருந்தும் கோபம் தணியாமல் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டு நொறுக்கி னான். இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார். அந்த வழியாகச் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் யாரும் இறங்கவில்லை. அந்த வாலியரை நெருங்குவதற்கு பயந்தனர்.
இதுபற்றி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டில்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால்டில்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். “நடந்த குற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது, மக்கள் பலர் பார்த்துள்ளனர், ஆனாலும் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பாற்ற நகரமாக டில்லி மாறிவிட்டது” என ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த சாஹல் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் கைது செய்யப்பட்டார்.கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் ஷஹபாத் டெய்ரி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. டில்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சிகரமான இந்த கொலைக்கு கண்டனம் தெர்வித்துள்ளார். “டில்லியில் ஒரு சிறுமி கொடூரமான முறையில் பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டார். இது மிகவும் வருத்தம் மற்றும் துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளிகள் அச்சமற்றவர்களாகிவிட்டனர், போலீசாருக்கு பயம் இல்லை. எல்ஜி சார்( லெப்டினன்ட் கவர்னர்), சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பு, ஏதாவது செய்யுங்கள். டில்லி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என கூறியுள்ளார்.