ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஜூன் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இதைத் தொடர்ந்து ரியல்மி இந்தியா வலைதளம் மற்றும் ஃப்ளிப்கார்டில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கான வலைப்பக்கம் லைவ் செய்யப்பட்டது.
புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்களின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் ஜூன் 8-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார். டிப்ஸ்டர் சுதான்ஷூ அம்போர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் மாடல்களின் அறிமுக தேதி, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் ஜூன் 8-ம் தேதி ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்களுடன் ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம். ரியல்மி 11 ப்ரோ மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் . ஆஸ்ட்ரல் பிளாக், சன்ரைஸ் பெய்க் மற்றும் ஒயசிஸ் கிரீன் என மூன்று நிறங்களில் இந்த போன்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க ரியல்மி 11 ப்ரோ மாடலில் 100MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.