அரியலூர் நகராட்சியில் பல ஆண்டுகளாக துப்புரவு பணி செய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களில் திடீரென அறிவிப்போ,காரணமோயின்றி 25 தொழிலாளர்களை 27/5/2023 முதல் பணியிலிருந்து நிறுத்திவிட்ட நிலையில், நிறுத்தப்பட்ட அடாவடித்தனத்தை கண்டித்தும், உடன் அவர்களை பணிக்கு அனுமதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இன்று காலை 6:00 மணி முதல் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சி ஆணையர் (பொ) தமயந்தியிடம் தொழிலாளர்கள் சார்பாக AITUC தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் T.தண்டபாணி சந்தித்து கடிதம் அளித்து பேசினார். ஒப்பந்த நிர்வாகமான விஷன் கேர் சர்வீஸ் சார்பாக ஒப்பந்ததாரர்கள் ஆர். நடராஜன் மற்றும் பாலமுருகன் ஆகியோர்களும் ஆணையருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முடிவில் நிறுத்தப்பட்ட 25 ஒப்பந்த துப்புரவு பணியாளர்களையும் பணிக்கு அனுமதிக்கப்பட்டு பணிக்கு செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உள்ளிருப்பு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அனைவரும் பணிக்கு திரும்பினர்.