கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவை, வரும் ஜூன் 3ம் தேதி கரூர் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில், குளித்தலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு சிலை திறப்பது, 100 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது, 100 இடங்களில் பிரம்மாண்டமாக கூட்டங்கள் நடத்துவது, கவியரங்கங்கள், பட்டிமன்றம் உட்பட நிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:திமுக கூட்டம்