கோவை, பொள்ளாச்சி அடுத்த சோமந்துறை சித்தூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான கூலித் தொழிலாளி சிவகுமார். இவரது மகன் 17 வயதான தினேஷ்குமார். தினேஷ் குமார் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷ் குமாரின் தாய்க்கு உணவு எடுத்து செல்வதற்காக தென்சங்கம்பாளையம் வழியாக பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது புளியங்கொண்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதான ரமேஷ் மற்றும் 16 வயதான ட்ரம்ஸ் இசைக்கலைஞர் சஞ்சய் ஆகிய இருவரும் டிரம்ஸ் உடன் இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிவக்குமார், ரமேஷ், சஞ்சய் ஆகிய மூவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தினேஷ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.இறந்த நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே நேரத்தில் சாலை விபத்தில் மூவர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.