நடப்பு ஐபிஎல் தொடர் இறுதி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. நேற்று நடந்த குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சுப்மன் கில் 129 ரன்கள் குவித்தார். இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இழக்குடன் களமிறங்கிய மும்பை 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பையை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதன் மூலம் நாளை நடைபெற உள்ள இறுதிபோட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இறுதிப்போட்டியில் வெல்லும் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும். சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:ஐபிஎல்