டாஸ்மாக் – திட்டங்கள் என்ன?
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் இருக்கும் பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள் கடைகள் இருக்கக்கூடாது என மாற்ற முடிவு.
மாவட்ட வாரியாக வாட்சப் குழுக்கள் அமைத்து டாஸ்மாக் கடைகள் தொடர்பாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை.
டாஸ்மாக் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் விதமாக கணினி பில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தத் திட்டம்.
சென்னையில் தலைமை கட்டுப்பாட்டு அறை அமைத்து டாஸ்மாக் கடைகளை கண்காணிக்கவும் ஆலோசனை.
தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் மேலாண் இயக்குனருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டம்.
500 கடைகள் மூடுவது தொடர்பான கணக்கெடுப்பை மே 31 ஆம் தேதிக்குள் முடித்து, மூடுவது தொடர்பான அறிவிப்பு கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என தகவல்