புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றம் வரும் 28ம் தேதி திறக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி திறக்கிறார். இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூ உள்ளிட்ட 20 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த விழாவை புறக்கணிப்போம் என 20 கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் வழக்கறிஞர் சுகின் என்பவர் ஜனாதிபதியைகொண்டு நாடாளுமன்றத்தை திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா ஆகியோர் கொண்ட அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே திட்டமிட்டபடி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை திறந்து வைப்பார்.