கரூரில் நடைபெறும் வருமானவரித்துறை சோதனையின்போது திமுக தொண்டரை ஐடி அதிகாரி தாக்கியது மற்றும் ஐடி அதிகாரி கார் கண்ணாடி உடைப்பு குறித்து மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
வருமானவரி சோதனை குறித்து எங்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஐடி அதிகாரிகள், சிஆர்பிஎப் போலீசாரையும் பாதுகாப்புக்கு அழைத்து வரவில்லை. கார் கண்ணாடி உடைக்கப்பட்டது பற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு 200 போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.