Skip to content
Home » வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்…

வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்…

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். டேராடூன்-டெல்லி இடையேயான தூரத்தை, 4 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த ரெயில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும். வார நாட்களில் புதன் கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது. டேராடூனில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் டெல்லி ஆனந்த விகார் ரெயில் நிலையத்திற்கு 11.45 மணிக்கு வந்தடையும். இடையில் மீரட், முசாபர்நகர், சகாரன்பூர், ரூர்கி மற்றும் ஹரித்வார் போன்ற ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் ஆனந்த் விகார் ரெயில்வே நிலையத்தில் இருத்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு டேராடூனுக்கு இரவு 10.35 மணியளவில் வந்தடையும். இந்த ரெயிலில் மொத்தம் எட்டு பெட்டிகள் உள்ளன. டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ.1065 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எக்சிக்யூடிவ் சேர் கார் டிக்கெட் விலை ரூ.1890 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *