Skip to content
Home » கை, கால் இழந்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி… இளைஞர் சாதனை….

கை, கால் இழந்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி… இளைஞர் சாதனை….

உத்தர பிரதேசத்தின் மெயின்புரி நகரில் வசித்து வருபவர் சுராஜ் திவாரி. 2017-ம் ஆண்டு காசியாபாத் மாவட்டத்தின் தாத்ரி பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் இரண்டு கால்களையும் அவர் இழந்து உள்ளார். வலது கை மற்றும் இடது கையில் இரண்டு விரல்களையும் இழந்திருக்கிறார். எனினும், மனம் தளராமல் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி, கடுமையாக உழைத்து, வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார்.

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அவரது தந்தை ரமேஷ் குமார் திவாரி கூறும்போது, நான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது மகன் என்னை பெருமையடைய செய்து உள்ளான். அவன் மிக துணிச்சலானவன்.
வெற்றி பெறுவதற்கு அவனது மூன்று விரல்களே போதும் என கூறியுள்ளார். சுராஜின் தாயார் கூறும்போது, எனது மகன் தைரியம் வாய்ந்தவன் என கூறியதுடன், வாழ்வில் வெற்றியடைய கடுமையாக உழைத்து உள்ளான் என கூறியுள்ளார். அவனது இளைய சகோதரர்களையும் கடுமையாக உழைக்கும்படி கூறுவது வழக்கம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *