Skip to content
Home » தாய் பல ஆண்களுடன் உறவு… கிராமத்துக்கே தீ வைத்த மகள்… அதிர்ச்சி

தாய் பல ஆண்களுடன் உறவு… கிராமத்துக்கே தீ வைத்த மகள்… அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி அருகே உள்ள கிராமம் சேனம்பட்லா. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல வீடுகள் இரவு நேரம் திடீர் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளன. முதலில் இதை மக்கள விபத்து என்றே நினைத்தனர். ஆனால் அடிக்கடி இது தொடரவே மக்கள் பயப்பட தொடங்கினர். இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பொருட்கள் நாசமாகின. மேலும் பலரும் காயமடைந்துள்ளனர். யாரோ நமது கிராமத்துக்கு பில்லி சூனியம், ஏவல் வைத்துவிட்டார்கள் என நினைத்த கிராம மக்கள் பல பூஜைகளையும், சடங்குகளையும் செய்தனர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. வீடுகள் நெருப்புக்கு இரையாகிக் கொண்டே இருந்தன. இதனால் கிராமத்தில் ரத்தக்காட்டேரி சுற்றுவதாக வதந்தி பரவவே ஊரே மயான அமைதியாக மாறியது. இரவில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து கேள்விப்பட்ட போலீசார், அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை எனத் தெரியவந்தது.

இதனால் போலீசாரே ஒருகட்டத்தில், இந்த கிராமத்தில் ஏதேனும் அமானுஷ்யம் இருக்குமோ என சந்தேகப்பட தொடங்கினர். அதன் பின்னர், முதன்முதலில் யார் வீட்டில் தீப்பற்றிய சம்பவம் நடந்தது என தேடிய போது தான் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.

அந்த வீட்டில் இருந்த 19 வயது இளம்பெண்ணின் பேச்சில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர். இதில் நடந்த உண்மைகளை அவர் போட்டு உடைத்தார். சில வருடங்களுக்கு முன் அப்பெண்ணின் தந்தை அவர்களை கைவிட்டு சென்றிருக்கிறார். இதனால் தனிமையில் இருந்த அவரது தாய்க்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் வரை சென்றிருக்கிறது. ஆரம்பத்தில் ஒன்று 2 பேர் என இருந்த நிலையில், பின்னர் அந்த கிராமத்தில் இருக்கும் பல ஆண்களுடன் அப்பெண்ணின் தாயார் உல்லாசத்தில் ஈடுபட தொடங்கினார். தாயின் இந்த காமலீலைகளை தெரிந்துகொண்ட அவரது மகள், இந்த கிராமத்தை விட்டே சென்றுவிடலாம் எனக் கூறியிருக்கிறார். ஆனால் அங்கிருந்து வர அவரது தாய் மறுத்திருக்கிறார். இதையடுத்து, இந்த ஊரில் பேய் நடமாட்டம் இருப்பதாக சொன்னால் அங்கிருந்து சென்றுவிடலாம் என யோசித்த அவரது மகள், முதலில் தங்கள் வீட்டுக்கே தீ வைத்திருக்கிறார். பின்னர், தனது தாயுடன் கள்ள உறவில் இருந்த ஆண்களின் வீடுகளுக்கு இரவில் யாருக்கும் தெரியாமல் தீ வைத்து வந்துள்ளார். பின்னர், அடுத்த நாள் காலையில் ஊரே பயத்தில் இருக்கும் போது, இவரும் அவர்களை மேலும் பயமுறுத்தும் விதமாக பேய் கதைகளை கட்டி வந்திருக்கிறார். இந்த விஷயம் அனைத்தையும் போலீசில் சொல்ல, அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது தாயாரிடமும் வயதுக்கு வந்த பெண் இருக்கும் வீட்டில் ஒழுக்கமாக நடந்து கொள் என போலீசார் அறிவுரை கூறி சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *