தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில், ” வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.