திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த ஆண் பயணி நூதன முறையில் கிரைண்டர் மிஷினில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 21 லட்சத்து 27 ஆயிரத்து 672 மதிப்புள்ள 348 கிராம் எடையுள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு
சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 586 மதிப்புள்ள 49 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அதை கழிவறையில் வீசி சென்ற நபர் யார் என்பது குறித்து விமானநிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் இன்று மொத்தம் ரூ.24 லட்சத்து 27 ஆயிரத்து 258 மதிப்புள்ள 397 கிராம் தங்கம் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.