Skip to content
Home » ஆழியார் வால்பாறை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா..

ஆழியார் வால்பாறை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா..

ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனசரக பகுதியில் புலி, மான், வரையாடு, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி வருகிறது.

ஆழியார் வால்பாறை சாலையில் 20″க்கும் மேற்பட்ட யானைகள்

கூட்டமாக குட்டிகளுடன் உலா வருகிறது.

கோடை விடுமுறையில் ஆழியார் மற்றும் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் யானை கூட்டத்தை கண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

ஒரு சிலர் வனவிலங்குகளின் அருகில் சென்று புகைப்படங்களை எடுக்கின்றனர்.

ஆபத்தை உணராமல் அலட்சியமாக சுற்றுலா பயணிகள் செயல்படக் கூடாது எனவும் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது எனவும் விதிகளை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *