திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, புதுபாலம், அங்காளபரமேஸ்வரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் வழிபடும் பக்தர்கள் நினைத்த காரியங்களை கைகூடும் என்பதால் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்து வருவது வழக்கம். அந்த வகையில் பிரபல திரைப்பட நடிகர் பிரபுவின் குலதெய்வ கோயிலாகவும் இருந்து வருகிறது. சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வந்த நடிகர்
பிரபு தனது குடும்பத்துடன் மன்னார்குடி அங்காள பரமேஸ்வரி கோயிலில் பூஜைகள் செய்து சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார். கோவில் பிரகாரத்தில் வலம் வந்த நடிகர் பிரபுடன் ரசிகர்கள் சூழ்ந்து வந்தனர். இதனை அறிந்த மன்னார்குடி அப்பகுதி மக்கள் கோயிலுக்கு வந்த பக்தர் நடிகர் பிரபுவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.