கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த ராச்சாண்டார் திருமலை கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 61ஆம் ஆண்டாக வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மனு அளித்துள்ளனர். கரூர் மட்டுமின்றி திருச்சி, திண்டுக்கல்,
புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட 10 அண்டை மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாடுகள் போட்டியில் பங்கு பெற உள்ளன. அரசு விதிமுறைகள் படி போட்டியை நடத்த அனுமதி வழங்க கோரி மனு அளித்துள்ளனர்.