சுந்தரா ட்ராவல்ஸ் போல் உள்ளது. கரூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வின்போது முறையான வசதிகள் இல்லாத பேருந்துகளை பார்த்து, அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பிய மாவட்ட கலெக்டர்.
கரூர் அடுத்த வெண்ணைமலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்துகளின் உறுதி தன்மைகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கரூர் மாவட்டத்தில் 89 தனியார் பள்ளிகளிலிருந்து 340 பேருந்துகள் கலந்து கொண்டன.
மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேருந்துகளை ஆய்வு செய்த போது சில பேருந்துகள் 20 வருடத்திற்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது தெரிய வந்துள்ளது. உடனடியாக அவைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் சிலர் உரிய சீருடை அணியாமல் கைலிகள், வேஷ்டிகள்
கட்டி இருந்தனர். அவர்களை பார்த்து கலெக்டர் ரொம்ப சாஃப்ட்டானவர் போல் என்று அனைவரும் காமெடியாக நினைத்து கொள்கிறார்களே என்றார். உரிய வசதிகள் இல்லாமல் காட்சியளித்த பேருந்தை சுந்தரா ட்ராவல்ஸ் வாகனம் போல் வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பள்ளி பேருந்துகள் முறையாக அனைத்தும் ஆய்வு செய்யப்படும். பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பேருந்துகளுக்கு அனுமதி வழஙகப்படாது என்றார். சில பேருந்துகள் அவசர வழி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் முறையாக இல்லாமல் இருந்தது என்றார்.