சிவகங்கை மாவட்டம், மாரநாடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (55). இவர் விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழன் போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐயாக பணியாற்றினார். நேற்று போலீஸ் ஸ்டேசன் எதிரே உள்ள கண்மாயில் (குளம்) குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் கண்மாய் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அப்போது அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கி எஸ்ஐ பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சென்று எஸ்ஐ உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.