சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்துள்ளர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். கோவையில் 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பள்ளி, சட்டப்படிப்பை சென்னையில் முடித்தார். 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய எஸ்.வைத்தியநாதன் 2015ல் ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.