திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டியை அருகே சீகம்பட்டி காட்டில் சிலர் சூதாடுவதாக வையம்பட்டி போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று, அங்கு சூதாடியவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், புதுப்பட்டியை சேர்ந்த மனோகரன்(40), சுரேஷ்(35), சீகம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன்(36) என்பது தெரியவந்தது. பின்னர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.