Skip to content
Home » திருச்சி அருகே அம்மா உணவகத்தில் சுகாதர சீர் கேடு…

திருச்சி அருகே அம்மா உணவகத்தில் சுகாதர சீர் கேடு…

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது ,இது துறையூர் நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது வெளியூர் செல்லும் ஏழைகள் மதிய உணவை அருந்துவதற்காக அதிமுக ஆட்சியில் ஏழைகளின் அட்சய பாத்திரமாக திறக்கப்பட்டது.
சுமார் தினமும் 600க்கும் மேற்பட்டோர் உணவருந்தி வருவது குறிப்பிடத்தக்கது. மதிய உணவு சமைப்பதற்காக துறையூர் நுகர் பொருள் வாணிப கழகத்தில் இருந்து அரிசிகள் கொண்டுவரப்பட்டு இங்கு சமைத்து பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படுகிறது. சமையல் அரிசி 15 மூட்டை பச்சரிசி 15 மூட்டை இட்லி அரிசி 18 மூட்டை மூட்டைகள் என கொண்டுவரப்பட்டது அப்படி கொண்டு வந்த அரிசி மூட்டைகள்
துறையூர் நகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை வாகனத்தில்


(குப்பை வண்டி) வண்டியின் மூலம் கொண்டு வந்து அம்மா உணவக்த்தில் தூய்மை பணியாரலை வைத்து இறக்கியதை பார்த்த பேருந்துக்காக வெளியூர் செல்ல காத்திருந்த பொது மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்துள்ளது என தெரிகிறது.

இங்கு உணவு அருந்துபவர்கள் டாட்டா அல்லது பிர்லா குடும்பத்தை சார்ந்தவர்கள் அல்ல அன்றாடம் உழைத்து வாழும் பாமர மக்கள் தங்கள் வயிற்று பசியை போக்கும் அளவிற்கு அம்மா உணவகம் அதிமுக ஆட்சியில் அட்சயப் பாத்திரமாக பயன் பெற்று வந்த நிலையில் தற்போது அம்மா உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்க அரிசி மூட்டைகள் குப்பை வண்டியில் வந்து இறக்கும் வீடியோ சமுக விலைதலங்களில் வைரலாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மா உணவகத்தின் சுகாதாரத்தை முறையாக கவனிப்பார்களா? பொது மக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுப்பார்களா ?என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *