கேரளா மாநிலம், செறுபுழா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். 3 குழந்தைகள் உள்பட 5 பேரின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் குடும்ப சண்டையில் குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் உயிரை மாய்த்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வௌியாகியுள்ளது. கேரளா கண்ணூரில் 2 வது திருமணம் கசெய்து ஒரு வாரம் ஆன தம்பதி 3 குழந்தைகளை தூக்கிட்டு கொலை செய்து விட்டு தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். கணவரால் கைவிடப்பட்ட ஸ்ரீஜா , தனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளாக கூறப்படுகிறது. இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.